Thursday, 20 March 2014

‘க‘ --- ‘கௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘க‘ --- வரிசையில் பழமொழிகள்
1. கங்கையில் படிந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது.
2. கங்கையில் முழுகினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
3. கசப்பை அறியான் இனிப்பை அறியான்
4. கஞ்சி கண்ட இடம் கைலாசம், சோறு கண்ட இடம் சொர்க்கம்
5. கட்டக் கரிய இல்லாமல் போனாலும் பேரு பொன்னம்மாள்.
6. கட்டக் கருத்த பாசிக்கு வழி இல்லையாம், பேரு மட்டும் முத்துமாலை.
7. கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த பாடமும் எத்தனை நாள் வரும்?
8. கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல.
9. கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
10. கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு பல வீடு.
11. கடக்க வழியறியாதவனுக்கு நடு வீடு காத வழி
12. கடப்பாறையை எடுத்து பல் குத்துவது போல
13. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
14. கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
15. கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
16. கடல் பெருகி மேலிட்டால் கரை ஏது?
17. கடல் மீனுக்கு நீச்சல் பழகனுமா?
18. கடல் மீனுக்கு நுழையன் இட்டதே பெயர்
19. கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
20. கடலில் பெருங்காயத்தை கரைத்தது போல
21. கடலில் மூழ்குபவரைவிடக் கள்ளில் மூழ்குபவர் அதிகம்
22. கடலுக்கு கரை போடுவார் உண்டோ?
23. கடலைத் தாண்ட ஆசை உண்டு, கால்வாயைத் தாண்ட கால்கள் இல்லை.
24. கடன்காரனை ஏற்றக் கழுவுண்டா?
25. கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.
26. கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
27. கடன் வாங்கினவன் மறந்தாலும் கடன் கொடுத்தவன் மறக்க மாட்டான்
28. கடனில்லாக் கஞ்சி கால் வயிறு
29. கடா பின்வாங்குவது பாய்வதற்கே!
30. கடிக்கிற நாய் குறைக்காது
31. கடி கோலில் கட்டிய நாய்
32. கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை
33. கடுகத்தனை நெருப்பும் போர கொழுத்திவிடும்.
34. கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
35. கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது
36. கடுகு போன இடம் தேடுவார், பூசனிக்காய் போன இடம் தெரியாது
37. கடுங்காற்று மழையைக் கூட்டும். கடுஞ்சினேகம் பகை கூட்டும்.
38. கடுஞ்சொல் தயவைக் கெடுக்கும்.
39. கடும் வியாதிக்கு கடும் மருந்து
40. கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல
41. கடைந்த மோரில் வெண்ணெய் எடுப்பது
42. கண் கண்டது கை செய்யும்
43. கண் குருடானாலும் நித்திரை குறையுமா?
44. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்
45. கண் மண் தெரியாத காதல்
46. கண்ட பாவனையில் கொண்டையை முடி
47. கண்டது கேட்டது சொல்லாதே!
48. கண்டது சொன்னால் கொண்டிடும் பகை
49. கண்டது பாம்பு; கடித்தது கருக்கு மட்டை.
50. கண்டது காட்சி; பெற்றது பேறு.
51. கண்டதே காட்சி; கொண்டதே கோலம்.
52. கண்டால் அச்சம், காணாவிட்டால் வெறுப்பு
53. கண்டால் ஒரு பேச்சு; காணாவிட்டால் ஒரு பேச்சு.
54. கண்டால் காமாச்சி நாயகர், காணவிட்டால் காமாட்டி நாயகர்.
55. கண்டால் தெரியாதா கம்பளி ஆட்டு மயிர்?
56. கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை.
57. கண்ணாடிக்குள் கண்ட பண முடிச்சுப்போல்
58. கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல் எறிவதா?
59. கண்ணான பேரைப் புண்ணாக்கலாமா?
60. கண்ணில் பட்டால் கரிக்குமா? புருவத்தில் பட்டால் கரிக்குமா?
61. கண்ணில் எண்ணெய் கரிக்கும்; பிடரியில் எண்ணெய் கரிக்குமா?
62. கண்ணிலிருந்து மறைந்தால் மனதிலிருந்து மறைவாய்
63. கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
64. கண்ணிலே மண்ணைத் தூவு
65. கண்ணுக்குள் சம்மணங்கொட்டுவாள்.
66. கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு
67. கண்ணை இமை காப்பதுபோல்
68. கண்ணைக் கெடுத்த தெய்வம் புத்தியைக் கொடுக்கும்.
69. கணக்கன் கணக்கறிவான்; தன் கணக்கைத் தான் அறியான்.
70. கணக்கன் கணக்கைத் தின்னாவிடில் கணக்கனைக் கணக்குத் தின்று விடும்.
71. கணக்குப் பார்த்தால் பிணக்கு வரும்
72. கத்தரிக்காய்க்கு கையும் காலும் முளைத்தது போல
73. கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்
74. கத்தி முனையில் காதலா?
75. கத்தி பொன் என்று வயிற்றில் குத்துவதா?
76. கதிரவன் சிலரைக் காயேன் என்குமா?
77. கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு
78. கதைக்குக் காலும் இல்லை, தலையும் இல்லை.
79. கந்தையானாலும் கசக்கிக் கட்டு
80. கப்பல்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி; கப்பல் கவிழ்ந்தால் பிச்சைக்காரி.
81. கப்பல்காரன் வாழ்வு காற்றடித்தால் போச்சு.
82. கப்பல் ஏரி பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்?
83. கப்பல் விட்டு கெட்ட குடி கொட்டை நூற்றால் ஆகுமா?
84. கம்பத்தில் அஞ்சு ஆனை கட்டுவாள்
85. கம்பத்தில் ஏறி கரணம் போட்டாலும் கீழே இறங்கி கையேந்த வேண்டும்
86. கம்பளிமேல் பிசின் போல
87. கம்பளி விற்ற காசுக்கு மயிர் முளைக்காது
88. கம்மாலையின் நாய் சம்மட்டி தொனிக்கு அஞ்சுமா?
89. கமரிலே பால் ஊற்றியதுபோல்
90. கயிற்றைப் பாம்பெனக் கலங்குவது
91. கயிறு இல்லாத பம்பரம்போல்
92. கரணம் தப்பினால் மரணம்
93. கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
94. கருப்பட்டியிலும் கல் இருக்கும்
95. கருப்பு வெளுப்பாகாது; கசப்பு இனிப்பாகாது.
96. கரும்பு இனிது என்று வேரோடு தின்னலாமா?
97. கரும்பு கசப்பது வாயின் குற்றம்.
98. கரும்பு கட்டால் கழுதையை அடித்தால் கழுதை அறியுமோ கரும்பு ருசி?
99. கரும்பு கட்டோடு இருக்க எறும்புதானே வரும்?
1. கரும்பு தின்னக் கூலியா?
2. கரும்பு வேம்பாச்சு
3. கரும்புக்கு உழுத புழுதி காய்ச்சிய பாலுக்குச் சர்க்கரை ஆகுமா?
4. கருமத்தை முடிப்பவன் கட்டத்தைப் பாரான்
5. கருமத்தை முடிப்பவன் கடலை ஆராய்வான்
6. கரை காணாத தோணி.
7. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
8. கல்யாண வீடு கண்டதும் இல்லை; கொட்டுச் சத்தம் கேட்டதும் இல்லை.
9. கல்லடிச் சித்தன் போன வழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
10. கல்லாடம் படித்தவனோடு மல்லாடாதே
11. கல்லாதவரே கண் இல்லாதவர்.
12. கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நன்று
13. கல்லிலே நார் உரிப்பது
14. கல்லுளிமங்கனுக்கு காடுமேடெல்லாம் தவிடுபொடி
15. கல்லைக்கூடக் கரைக்கலாம் மனதைக் கரைக்கக் கூடாது.
16. கல்வி அழகே அழகு.
17. கல்வி இல்லா செல்வம் கற்பில்லா அழகு.
18. கல்வி கரை இல, கற்பவர் நாள் சில
19. கல்விக்கு அழகு கசடற மொழிதல்.
20. கல்விக்கு இருவர்; களவுக்கு ஒருவர்.
21. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
22. கலத்திலே சோற்றைப் போட்டு கையைப் பிசைவது போல
23. கவலை உடையோருக்கு கண்ணுறக்கம் ஏது?
24. கழுத்து வரை கடன்
25. கழுதை குதிரை ஆகுமோ? குதிரை கழுதை ஆகுமோ?
26. கழுதை தேய்ந்து கட்டெறும்பானது
27. கழுதை மேல் ஏறினால் சுகம் இல்லை.
28. கழுதைப் புண்ணுக்கு புழுதி மருந்து
29. கழுதை விட்டை ஆனாலும் கை நிறைய வேண்டும்
30. கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்த கதை
31. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
32. கழுவிக் கழுவிச் சேற்றில் மிதித்ததைப்போல்
33. கள் விற்று கலப் பணம் சம்பாதிப்பதைவிட கற்பூரம் விற்று கால் பணம் சம்பாதிப்பதே மேல்.
34. கள்வன் பெண்சாதி கைம்பெண்சாதி
35. கள்ள மனம் துள்ளும்
36. கள்ள மாடு சந்தை ஏறாது
37. கள்ளமில்லா பிள்ளை உள்ளம்
38. கள்ளன் அச்சம் காடு கொள்ளவில்லை.
39. கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்
40. கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே!
41. கள்ளிக்கு கண்ணீர் கண்ணிலே; நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
42. கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்?
43. கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்
44. களவெலி வளை எடாது
45. களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
46. களையில்லா விளை நிலமா?
47. களையை முளையிலேயே கிள்ளிவிடு
48. கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் இனிப்பு
49. கற்பித்தவன் காப்பாற்றுவான்
50. கற்பில்லா அழகு மணமில்லா பூ
51. கற்ற இடத்திலேயே வித்தையைக் காட்டலாமா?
52. கற்றது கை அளவு, கல்லாதது உலகளவு
53. கற்றோர் அருமை கற்றோர் அறிவர்
54. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
55. கறக்குற பாலுக்கு உதைக்குது பல்லு போக
56. கறந்த பால் மடி புகாது
57. கன்றுக் குட்டியை கட்டச் சொன்னார்களா? கட்டுத் தறியைப் பிடுங்கச் சொன்னார்களா?
58. கன்றைச் சுமக்க சம்மதித்தால் பசுவை சுமக்க வைப்பார்கள்
59. கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா?
60. கன்னியின் அழகு காண்பவர் கண்ணில்
61. கன மழை பெய்தாலும் கல்லுக்குள் ஈரம் ஏறாது.
62. கனவில் கண்ட பணம் செலவுக்கு உதவுமா?
63. கனிந்த பழம் தானே விழும்
64. கனியால் மரத்துக்குப் பெயர்; மகனால் தந்தைக்குப் பெயர்.

கா‘ --- வரிசையில் பழமொழிகள்

65. காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததுபோல
66. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
67. காக்கைக் கூட்டத்தில் குயிலுக்கு என்ன வேலை?
68. காசில்லாதவனுக்கு வராகன் பேச்சு எதுக்கு?
69. காசுக்கு ஒரு குதிரை; அதுவும் காற்றைப்போல் பறக்க வேண்டும்.
70. காசைக் கொடுத்து, குத்து மாடு வாங்கினதுபோல்
71. காட்டில் எரித்த நிலவும், கானலுக்குப் பெய்த மழையும்
72. காட்டுக்கு எரித்த நிலா, கானலுக்குப் பெய்த மழை.
73. காட்டுப்பூனைக்குச் சிவராத்திரி விரதமா?
74. காட்டு மரத்தடியில் நில்லாதே!
75. காட்டு வாழை வந்தால் வீட்டு வாழை போகும்.
76. காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்கப் பயமா?
77. காடு எரிந்தால் சந்தன மரம் வேகாதோ?
78. காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
79. காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
80. காணப்பட்டதெல்லாம் அழியப்பட்டது.
81. காணி ஆசை கோடி கேடு.
82. காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்.
83. காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான்.
84. காத வழிப் பேரில்லாதவன் கழுதை.
85. காதல் வியாதிக்கு மருந்திலை
86. காதலுக்கு கண்ணில்லை; ஆத்திரத்துக்கு அறிவில்லை
87. காதுக்கு கடுக்கண் இட்டால் முகத்துக்கு அழகு.
88. காப்பானுக்குக் கள்ளன் இல்லை
89. காப்பு சொல்லும் கை மெலிவை.
90. காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
91. காய்த்த மரம் கல்லடி படும்
92. காய்ந்த மரம் துளுக்குமா?
93. காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது.
94. கார்த்திகை பின் மழையும் இல்லை; கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை.
95. காராம்பசுவின் பால் வெள்ளை
96. காராம்பசுவுக்குப் புல்லும் ஆம், நந்தவனத்துக்கு களையும் ஆம்.
97. காரிகை அற்றுக் கவி சொல்வதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று.
98. காரியம் ஆகும்வரை கழுதை காலைப்பிடி.
99. காரியம் பெரிதா? வீரியம் பெரிதா?
1. கால் காசு பூனை முக்கால் காசு தயிரைக் குடித்தது போல
2. கால் பிறழ்ந்தாலும் நா பிறழாதே!
3. காலம் அறிந்து செயல்படு
4. காலம் செய்வது ஞாலம் செய்யாது.
5. காலம் போயும் வார்த்தை நிற்கும்; கப்பல் போயும் துறை நிற்கும்.
6. காலணாவுக்கு நாலு சத்தியம்
7. காலத்தில் பெய்த மழைபோல்
8. காலத்திற்கேற்ற கோலம்
9. காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாம் நுண்சீலை.
10. காலுக்குத் தகுந்த செருப்பும் கூலிக்குத் தகுந்த உழைப்பும்.
11. காவடி பாரம் சுமக்குறவனுக்குத்தானே தெரியும்?
12. காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கணும்
13. காற்றில் துப்பினால் முகத்தில் விழும்
14. காற்றில்லாமல் தூசி பறக்குமா?
15. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
16. காற்றுள்ள போதே தூற்று; கரும்புள்ள போதே ஆட்டு.
17. கான மயிலாட கண்டிருந்த வான்கோழி



கி‘ --- வரிசையில் பழமொழிகள்

18. கிட்டாதாயின் வெட்டென மற
19. கிடப்பது ஒட்டுத்திண்ணையில், கனாக் காண்பது மச்சு மாளிகை.
20. கிடைப்பது கிடைக்கும்
21. கிணற்றுக்குத் தப்பி தீயிலே பாய்ந்தான்
22. கிணற்றுத் தவலைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
23. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது
24. கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பது போல்

கீ‘ --- வரிசையில் பழமொழிகள்

25. கீர்த்தியால் பசி தீருமா?
26. கீரியும் பாம்பும் போல
27. கீரைக் கடைக்கும் ஒரு எதிர்க் கடை வேண்டும்
28. கீரைத் தண்டு பிடுங்க ஏலப்பாட்டு ஏன்?
29. கீழ் குலத்தான் ஆனாலும் கற்றவன் மேற்குலத்தான்
30. கீழே கிடக்கிற கல்லைத் தூக்கி காலிலே போட்டுக்கொண்டு குத்துதே குடையுதேன்னா எப்படி?
31. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.
32. கீறி ஆற்றினால் புண் ஆறும்

கு‘ --- வரிசையில் பழமொழிகள்

33. குங்குமம் சுமந்த கழுதை வாசனை அறியுமா?
34. குசவனுக்கு ஆறு மாதம்; தடிக்காரனுக்கு அரை நாளிகை.
35. குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்
36. குட்டையை குழப்பி மீன் பிடிப்பார்
37. குட்டையைக் குழப்பினால்தான் மீன் பிடிக்க முடியும்
38. குடத்தில் இட்ட விளக்கு
39. குடத்தில் பொன் கூத்தாடுமா?
40. குடம் பாலுக்கு துளி நஞ்சு.
41. குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்
42. குடலும் கூந்தலும் கொண்டது கோலம்
43. குடிகாரன் ஏச்சு நிஜமான பேச்சு
44. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு
45. குடியிருந்து அறி, வழி நடந்து அறி.
46. குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீர்.
47. குடிபோன வீட்டில் பெருச்சாளி உலவும்
48. குடி மதம் அடிபடத் தீரும்
49. குடுக்காத இடையன் சினை ஆட்டை காட்டுன மாதிரி
50. குண்டு சட்டியில் குதிரை ஓட்டினான்
51. குணம் மாற்ற குரு இல்லை
52. குத்துகிற உரல் பஞ்சம் அறியுமா?
53. குதிரை ஏறாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
54. குதிரை குருடானாலும், கொள்ளு தின்கிறதில் குறையா?
55. குதிரைக்கு கொள்ளு வைக்கலாம், அதற்காக நாம் அதை சாப்பிட முடியுமா?
56. குதிரையின் குணம் அறிந்துதான் தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை
57. குந்தித் தின்றால் குன்றும் கரையும்
58. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை
59. குப்பை உயர்ந்தென்ன? கோபுரம் தாழ்ந்தென்ன?
60. குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
61. குபேரப் பட்டினம் கொள்ளை போனாலும் அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு துடைப்பக் கட்டையும் கையில் அகப்படாது.
62. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த்தாம்
63. கும்பிடு கொடுத்து கும்பிடு வாங்கு
64. குமரிக்கு ஒரு பிள்ளை, கோடிக்கு ஒரு வெள்ளை.
65. குயவனுக்கு ஆறு மாதம், தடிக்காரனுக்கு அரை நாழி.
66. குரங்கு கையில் பூமாலை
67. குரங்குக்கும் தன் குட்டி பொன் குட்டி.
68. குரு இல்லாமல் வித்தையில்லை; முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
69. குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
70. குருட்டுக் கண்ணுக்கு குறுணி மையிட்டுமென்ன?
71. குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல
72. குருடன் ராஜ பார்வை பார்த்தானாம்
73. குருடனுக்கு குருடன் கோல் பிடிக்கலாமா?
74. குருடனுக்குப் பால் கொக்கு போல
75. குரிவில்லாமல் வித்தையா?
76. குருவியின் தலையில் பனங்காயை வைத்ததுபோல்
77. குரைக்கிற நாய் கடிக்காது, கடிக்கிற நாய் குரைக்காது.
78. குல வழக்கும், இஅடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
79. குல வித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி.
80. குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே!
81. குளவிக் கூட்டைக் கோலால் குலைத்தது போல
82. குளம் காப்பவன் தண்ணீர் குடியானோ?
83. குளம் வெட்டும் முன்பே முதலை குடி வருமா?
84. குளத்தில் போட்டுட்டு கிணற்றில் தேடலாமா?
85. குளிக்கப் போயி சேற்றைத் தடவிக் கொள்வது
86. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
87. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
88. குறத்தி பிள்ளை பெற குறவன் கஷாயம் குடிக்கிறான்
89. குறை குடம் தளும்பும், நிறை குடம் தளும்பாது.
90. குறையச் சொல்லி நிறைய அள.
91. குறையேயில்லாதவன் பிறக்கவே இல்லை
92. குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவர் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.

கூ‘ --- வரிசையில் பழமொழிகள்

93. கூடவே இருந்து கொள்ளியைச் செருகினாற்போல்
94. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
95. கூண்டுப் பறவை மீண்டும் பாடாது
96. கூத்தாட்டுச் சிலம்பம் படை வெட்டுக்கு ஆகுமோ?
97. கூத்தாடிக்கு கீழே கண்; கூலிக்காரனுக்கு மேலே கண்.
98. கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
99. கூரை ஏறி கோழி பிடிக்காத குருவா வானத்தைக் கீறி வைகுந்தம் காட்டுவான்?

1. கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காக்கை வரும்
2. கூலியைக் குறைக்காதே! வேலையைக் கெடுக்காதே!
3. கூழ் என்றாலும் குடித்தவன் பிழைப்பான்
4. கூழ் என்றாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
5. கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்; குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.
6. கூழுக்கு மாங்காய் தோற்குமோ?
7. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை

கெ‘ --- வரிசையில் பழமொழிகள்

8. கெட்ட காலத்திலும் நல்ல காலம்
9. கெட்டாலும் செட்டி, கிழிந்தாலும் பட்டு.
10. கெட்டும் பட்டிணம் சேர்
11. கெட்டிக்காரன் புழுகு எட்டு நாள் மட்டும்
12. கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
13. கெடு மதி கண்ணுக்குத் தெரியாது.
14. கெடுவான் கேடு நினைப்பான்
15. கெண்டையைப் போட்டு வராலை இழு.
16. கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
17. கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல

கே‘ --- வரிசையில் பழமொழிகள்

18. கேப்பார் புத்தி கேட்டு கெடாதே!
19. கேட்டதெல்லாம் நம்பாதே; நம்பியதையெல்லாம் சொல்லாதே!
20. கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே.
21. கேள்விப் பேச்சில் பாதி நிஜம்
22. கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.

கை‘ --- வரிசையில் பழமொழிகள்

23. கை கண்ணில் பட்டது என்று கையை வெட்டிப் போடுவதா?
24. கையிலே காசு வாயிலே தோசை ஆகுமா?
25. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலை
26. கைக்கோளனுக்கு கால் புண்ணும், நாய்க்குத் தலைப் புண்ணும் ஆறாது.
27. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
28. கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.
29. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
30. கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்
31. கையில் உண்டென்றால் காத்திருப்பர் ஆயிரம் பேர்
32. கையில் பிடிப்பது துளசி மாலை; கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்.
33. கையிலே காசு; வாயிலே தோசை.
34. கையூன்றிக் கரணம் போட வேண்டும்.
35. கையை பிடித்து கள்ளை வார்த்து, மயிரை பிடித்து பணம் வாங்குறதா?

கொ‘ --- வரிசையில் பழமொழிகள்

36. கொட்டினால் தேள்; கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி.
37. கொடிக்குச் சுரைக்காய் பாரமா?
38. கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
39. கொடுங்கோல் அரசு நெடுநாள் நில்லாது
40. கொடுங்கோல் மன்னவன் நாட்டிலும் கடும்புலி வாழும் நாடு மேல்
41. கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை.
42. கொண்டவன் தூற்றினால் கண்டவனும் தூற்றுவான்
43. கொண்டானும் கொடுத்தானும் ஒன்று; கல்யாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
44. கொல்லன் தெருவில் ஊசி விலை போகுமா?
45. கொல்லுவதும் சோறு, பிழைப்பதும் சோறு.
46. கொல்லைப் பாழானாலும் குருவிக்குப் பஞ்சமா?
47. கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்
48. கொல்லைக்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
49. கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை; குறவனுக்கு முறையும் இல்லை.
50. கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகக்கூடாது.
51. கொள்ளும் வரை கொண்டாட்டம், கொண்ட பிறகு திண்டாட்டம்.
52. கொள்ளை அழகும் கள்ள மனமும்.
53. கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

கோ‘ --- வரிசையில் பழமொழிகள்

54. கோடாரிக் காம்பு குலத்துக்கு ஈனன்
55. கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்.
56. கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதிருப்பது கோடி பெறும்.
57. கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
58. கோடை இடி இடித்தது போல
59. கோணிக் கோடி கொடுப்பினும் கோணாமல் காணி கொடுப்பது நல்லது.
60. கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு; பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
61. கோபம் அற்றால் குரோதம் ஆறும்
62. கோபம் சண்டாளம்
63. கோபம் பாவம்
64. கோவில் பூனை தேவருக்கு அஞ்சுமா?
65. கோழி குருடாயிருந்தா என்ன? செவிடாயிருந்தா என்ன? குழம்பு ருசியாயிருந்தா சரி.
66. கோழி மிதித்து குஞ்சு சாகுமா?
67. கோழி முட்டைக்கு சவரம் செய்தது போல்
68. கோழி தின்ற கள்வனும் கூட நின்று குலவுகிறான்
69. கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு
70. கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.
71. கோளும் சொல்லி கும்பிடுவானேன்?

‘ஔ‘ - வரிசையில் பழமொழிகள்

1. ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை

‘ஓ‘ - வரிசையில் பழமொழிகள்

1. ஓட்டைக் கப்பலுக்கு ஒம்போது மாலுமி
2. ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
3. ஓட்டைப் பானையை ரொப்ப முடியுமா?
4. ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
5. ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா?
6. ஓடவும் மாட்டேன் பிடிக்கவும் மாட்டேன்
7. ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்
8. ஓடியும் கிழவிக்குப் பிறகா?

‘ஒ‘ - வரிசையில் பழமொழிகள்

1. ஒட்டைக்கூத்தன் பாட்டைக் கேட்டு இரட்டை தாழ்பாள் போட்டது போல.
2. ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோல் ஆகும்
3. ஒவ்வொரு பொருளும் தத்தம் இடத்தில்
4. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை
5. ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்; உள்ளே இருப்பது ஈரும் பேனாம்.
6. ஒழுக்கம் உயர் குலத்திலும் நன்று
7. ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு.
8. சூரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா?
9. ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
10. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி உறை மோர்
11. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்
12. ஒரு குண்டிலேயே கோட்டையைப் பிடிக்க முடியுமா?
13. ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைப்பதா?
14. ஒரு நேரம் ஒரு நோக்கம்
15. ஒரு பொதி பஞ்சுக்கு ஒரு பொறி நெருப்பு
16. ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்
17. ஒரு விரல் நொடி இடாது
18. ஒரு ஊருக்கு ஒமபது வழி
19. ஒருவர் அறிந்தால் ரகசியம்; இருவர் அறிந்தால் அம்பலம்; மூவர் அறிந்தால் தண்டோரா.
20. ஒருவரின் நஞ்சு ஒருவரின் மருந்து
21. ஒருவராய் பிறந்தால் தனிமை; இருவராய் பிறந்தால் பகைமை.
22. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
23. ஒரே தவறை இருமுறை செய்யாதே!
24. ஒழுக்கு வீட்டில் வெள்ளம் வந்தது போல
25. ஒள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை மெல்ல நுழைந்து விடும்
26. ஒளி இல்லாவிட்டால் இருள்; இருள் இல்லாவிட்டால் ஒளி.

‘ஐ‘ - வரிசையில் பழமொழிகள்

1. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
2. ஐந்து வரைதான் அண்ணன் தம்பி; பத்து வயதில் பங்களி.
3. ஐயமான காரியத்தை செய்யாதே
4. ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?
5. ஐயோ என்றாலும் ஆறு மாதம் பாவம் பிடிக்கும்

‘ஏ‘ - வரிசையில் பழமொழிகள்

1. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
2. ஏடு அறியாதவன் பீடு பெறாதவன்
3. ஏண்டா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் பூனைக் குட்டிக்கு புல் பறிக்க என்கிறான்
4. ஏணைக் கழிக்கு கோணைக் கழி வெட்டுவது
5. ஏதும் அறியாதான் எதையும் ஐயுறான்
6. ஏமாந்த சோணகிரி
7. ஏரி நிறைந்தால் கரை கசியும்
8. ஏமாந்தால் நாமம் போடுவான்
9. ஏவா மக்கள் மூவா மருந்து
10. ஏவுகின்றவனுக்கு வாய்ச்சொல், செய்கின்றவனுக்கு தலைச் சுமை.
11. ஏழ்மையில் கொடுமை கடன் தொல்லை
12. ஏழையென்றால் இளக்காரம்
13. ஏழைக்கேத்த எள்ளுருண்டை
14. ஏழை சொல் அம்பலம் ஏறாது
15. ஏற்றம் உண்டென்றால் இறக்கமும் உண்டு
16. ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச்சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
17. ஏறப்படாத மரத்தில் எண்ணப்படாத் காய்
18. ஏறவிட்டு ஏணியை வாங்கினது போல

‘எ‘ - வரிசையில் பழமொழிகள்

1. எங்கப்பன் குதிருக்குள் இல்லை
2. எங்க வீட்டுக்கு வந்தா என்ன கொண்டு வருவாய்? உங்க வீட்டுக்கு வந்தா என்ன கொண்டு தருவாய்?
3. எங்கே புகை உண்டோ அங்கே அழலுண்டு
4. எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன்
5. எச்சிலைக் குடித்து தாகம் தீருமா?
6. எட்டாப்பூ தெய்வத்துக்கு
7. எட்டி பழுத்தென்ன? ஈயார் வாழ்ந்தென்ன?
8. எட்டியுடன் சேர்ந்த இலவும் தீப்பட்டது.
9. எட்டினால் குடுமியைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.
10. எடுப்பது பிச்சை; ஏறுவது பல்லாக்கு.
11. எடுப்பார் கைப்பிள்ளை
12. எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் மெத்த உண்டு.
13. எண் சாண் உடம்பு ஒரு சாண் ஆனேன்
14. எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்
15. எண் மிகுந்தவனே திண் மிகுந்தவன்
16. எண்ணமெல்லாம் பொய்யாகும், லிகிதம் மெய்யாகும்.
17. எண்ணிச் செய் செட்டு, எண்ணாமல் செய் வேளாண்மை.
18. எண்ணிச் செய்பவன் செட்டி, எண்ணாமல் செய்பவன் மட்டி.
19. எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு
20. எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பொன்னாகுமா?
21. எத்தனை நாடுகளோ அத்தனை வழக்கங்கள்
22. எத்தனை விளக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா?
23. எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்!
24. எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?
25. எதிரிக்கு சகுனத்தடை என்று மூக்கை அறுத்துக் கொள்ளுகிறது போல.
26. எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?
27. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
28. எரிகிற அடுப்பில் எண்ணெய் ஊற்றினாற்போல
29. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
30. எரிகிற வீட்டிலே பிடுங்கிறவரை லாபம்.
31. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்
32. எருமை வாங்கும் முன் நெய்க்கு விலை பேசாதே.
33. எருது இல்லாது இருந்தால் பசு பத்தினி
34. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
35. எருவுக்குப் போனவன் எலுமிச்சம்பழம் எடுத்தது போல
36. எல்லா ஆறுகளும் சங்கமிக்கும் கடலிலே.
37. எல்லாம் அறிந்தவனும் இல்லை, எதுவுமே அறியாதவனும் இல்லை.
38. எல்லோரும் பல்லக்கு ஏறினால் சுமப்பவர் யார்?
39. எல்லோரும் மனிதரா? கல்லெல்லாம் மாணிக்க கல்லா?
40. எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
41. எல்லோருக்கும் சனியன் துரும்பு போல, எனக்கு சனியன் எருமை போல.
42. எல்லோருக்கும் நல்லவன் இதுவரை பிறக்கவில்லை
43. எலி அம்மணத்தோடு போகிறதாம்.
44. எலி அழுதால் பூனை விடுமா?
45. எலி புற்றெடுக்க பாம்பு குடி புகும்.
46. எலி வளையானாலும் தனி வளைதான்
47. எலி வேட்டைக்குத் தவிலடியா?
48. எலி தலையில் கோடாரி விழுந்தது போல.
49. எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா?
50. எலிக்கு பிராண அவஸ்தை, பூனைக்கு கொண்டாட்டம்
51. எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
52. எழுதா விதிக்கு அழுதால் வருமா?
53. எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்
54. எழுதுகிறது பெரிதல்ல, இன்னும் அறிந்து சேர்க்கிறது பெரிது
55. எழுதுனவன் ஏட்டக் கெடுத்தான், படிச்சவன் பாட்டக் கெடுத்தான்
56. எள் என்பதற்கு முன் எண்ணெய்யாய் வந்து நிற்பான்
57. எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துனி
58. எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
59. எறும்பின் கண்ணுக்கு எருமை மூத்த்ரம் ஏகப் பெருவெள்ளம்
60. எறும்பும் தன் கையால் எண் ஜாண்.
61. எறும்பூர கல்லும் தேயும்

‘ஊ‘ - வரிசையில் பழமொழிகள்

1. ஊசி போகுற கணக்குப் பார்ப்பான்; பூசனி போகுற கணக்கு தெரியாது.
2. ஊசிபோல் மிடறும் பானைபோல் வயிறும்
3. ஊசியை காந்தம் இழுக்கும், உத்தமனை சிநேகம் இழுக்கும்
4. ஊடல் காமத்துக்கு இன்பம்
5. ஊண் அற்ற போதே உறவற்றுப் போகும்
6. ஊணுக்கு முந்து கோளுக்குப் பிந்து
7. ஊத்தைக்கு விளாங்காய் சேர்த்தது போல்
8. ஊதாரிக்குப் பொன் துரும்பு
9. ஊதாரியிடம் கிடைக்காது கைமாற்று
10. ஊமை கண்ட கனா
11. ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்
12. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
13. ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா ?
14. ஊர் வாயை மூட உலைமூடி இல்லை
15. ஊர்க்குருவி மேலே ராம பாணம் தொடுக்கலாமா?
16. ஊரறிந்த பார்ப்பனுக்கு பூணூல் எதற்கு?
17. ஊரார் நாய்க்குச் சோறிட்டாலும் அது உடையவன் வீட்டில்தானே குரைக்கும்?
18. ஊரார் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே.
19. ஊராருக்கெல்லாம் ஒரு வழி, இவனுக்கு ஒரு வழி.
20. ஊருக்காக இரும்பு அடிக்கிறவன் வீட்டுக்குத் தவிடு இடிக்க முடியவில்லையாம்.
21. ஊருக்கு ஊர் மாறும் பழக்கம்
22. ஊருக்கெல்லாம் சாஸ்திரம் சொல்லும் பல்லி கூழிலே விழுந்ததாம்
23. ஊருக்கென்று ஒரு தாசி இருந்தால் யாருக்கென்று அவள் ஆடுவாள்?
24. ஊருடன் பகைத்தல் வேருடன் கெடும்
25. ஊருடையவன் பெண்டிரைப் பிடித்தால் யாரிடம் சொல்லி முறையிடுவதாம்?
26. ஊரோச்சம் வீடு பட்டினி
27. ஊன் அற்றபோது உடலற்றது
28. ஊனுக்கு முந்துவான்; வேலைக்கு பிந்துவான்.
29. ஊன்றக்கொடுத்த தடி என் உச்சியை உடைக்கிறது

‘உ‘ - வரிசையில் பழமொழிகள்

1. உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனது
2. உள்ளங்கை நெல்லிக்கனி போல
3. உள் வீட்டுக் கடனும் உள்ளங்கை சிரங்கும்
4. உச்சனை உச்சன் பார்த்தால் மச்சு வீடும் குச்சு வீடாகும்
5. உஞ்சவிருத்திக்காரனுக்கு அஞ்சு பெண்டாட்டி
6. உட்கார்ந்தவன் காலில் மூதேவி; ஓடுபவன் காலில் சீதேவி.
7. உட்கார்ந்து படுத்துக் கொள்ள வேண்டும்
8. உடல் உள்ளவரை கடல் கொள்ளாத கவலை.
9. உடல் ஒருவனுக்கு பிறந்தது, நாக்கு பலருக்கு பிறந்தது.
10. உட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா?
11. உடம்புபோனால் போகிறது, கை வந்தால் போதும்
12. உடாப் புடவையை வண்டூதும்
13. உடுத்து கெட்டான் துலுக்கன்; உண்டு கெட்டான் மாத்துவன்.
14. உடைந்த பானை ஒட்டாது
15. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா
16. உடையவனில் கைப் பற்றியவன் மிடுக்கன்
17. உண்டார் மேனி கண்டால் தெரியும்
18. உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு
19. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது
20. உண்டு ருசி கண்டவனும் விட மாட்டான்; பெண்டு ருசி கண்டவனும் விட மாட்டான்.
21. உண்மை ஒரு நாள் வெளி வரும்
22. உண்மை சுடும்
23. உண்மையே பேசுவார் உன்மத்தரும், மூடரும்.
24. உத்திராட்சப் பூனை உபதேசம் பண்ணியது போல
25. உத்யோகம் புருஷ லட்சணம்
26. உத்தியோகத்திற்கேற்ற சுகம்
27. உப்பிட்டவரை உள்ளளவும் நினை
28. உப்பைத் தின்னவன் தண்ணீ குடிப்பான்
29. உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
30. உயிருள்ளவரை போராடு
31. உயிருள்ளவரை நம்பிக்கை
32. உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை, ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல.
33. உரல் போய் மத்தளத்திடம் முறையிட்டது
34. உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
35. உரியில் தயிர் இருக்க ஊரெங்கும் போனானாம்
36. உலகம் பல விதம்
37. உழவன் கணக்கு பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது
38. உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல.
39. உழுகிறவன் இஅளப்பமானால் எருது மச்சினம் கொண்டாடும்
40. உழைக்காத செல்வம் நிலைக்காது
41. உழைப்புக்குப்பின் களிப்பு
42. உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்திற்கு உலகம் பேய்
43. உழக்கு மிளகு கொடுப்பானேன், ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன்?
44. உள்ளக்கருத்தை வள்ளல் அறியும்
45. உள்ளங்கை நெல்லிக்கனி
46. உள்ளது போகாது; இல்லாதது வாராது.
47. உள்ளதை உள்ளபடி சொல்
48. உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண்
49. உள்ளம் தீ எரிய, உதடு பழம் சொரிய.
50. உளவு இல்லாமல் களவு இல்லை.
51. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
52. உரலில் தலையைக் கொடுத்துவிட்டு உலக்கைக்கு பயந்தால் முடியுமா?
53. உரியில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
54. உரு ஏறத் திரு ஏறும்
55. உருட்டும் புரட்டும் எத்தனை நாளைக்கு?
56. உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
57. உற்சாகம் கொண்டு மச்சைத் தாவுகிறான்
58. உறவு போகாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
59. உறுதியான உடலில் உறுதியான மனது
60. உன் சொல்லுக்கு உப்புமில்லை, புளியுமில்லை.
61. உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா?

‘ஈ‘ - வரிசையில் பழமொழிகள்

1. ஈக்கு விஷம் தலையில், தேளுக்கு விஷம் கொடுக்கில்.
2. ஈட்டி எட்டும் மட்டும் பாயும்; பணம் பாதாளம் வரை பாயும்.
3. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை
4. ஈயாத லோபி இருந்தென்ன போயென்ன?
5. ஈயார் தேட்டை தீயார் பறிப்பார்
6. ஈயான் தோட்டத்து வாழை இரண்டு குலை தள்ளும்
7. ஈர நாவுக்கு எலும்பு இல்லை
8. ஈனனுக்கு இரு செலவு

‘இ‘ - வரிசையில் பழமொழிகள்

1. இக்கரைக்கு அக்கரை பச்சை
2. இஞ்சி தின்ன குரங்குபோல்
3. இஞ்சி லாபம் மஞ்சளில்.
4. இட்டதெல்லாம் பயிராகுமா? பெற்றதெல்லாம் பிள்ளயாகுமா?
5. இட்டுக் கெட்டார் யாருமில்லை
6. இடக்கனுக்கு வழி எங்கே? கிடக்கிறவன் தலை மேலே.
7. இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்
8. இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பின்னால் ஆகாது.
9. இடுகிற தெய்வம் எங்கும் இடும்
10. இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
11. இமையின் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
12. இரக்கப் போனாலும் சிறக்கப்போ
13. இருந்தால் பூனை, நடந்தால் புலி.
14. இல்லாது பிறவாது; அள்ளாது குறையாது.
15. இல்லாமை ஏழ்மையல்ல, பேராசையே ஏழ்மை.
16. இல்லானை இல்லாளும் வேண்டாள்
17. இல்லையென்ற உண்மை நாளையென்ற பொய்யைவிட மேல்
18. இலங்கையில் பிறந்தவனெல்லாம் இராவணன் இல்லை.
19. இலவு காத்த கிளி
20. இலையும் பழுப்பும் எங்கும் உண்டு
21. இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
22. இளங்கன்று பயமறியாது
23. இளமையில் சோம்பல், முதுமையில் வருத்தம்
24. இளமையில் வேகம், முதுமையில் விவேகம்
25. இரக்கம் இல்லாதவன் நெஞ்சம் இரும்பினும் கொடியது
26. இரட்டைப் பிறவிகள் போல
27. இரப்பவனுக்குப் பஞ்சம் என்றுமில்லை.
28. இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே
29. இரண்டு தப்புகள் ஒரு ஒப்பு ஆகாது
30. இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குக் கொண்டை என்னத்திற்கு?
31. இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே!
32. இராப்பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் கேட்டானாம்.
33. இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பானாம்
34. இருப்பதை விட்டுட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படாதே!
35. இரும்பு அடிக்கிற இடத்தில ஈய்க்கு என்ன வேலை?
36. இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இராது
37. இருதலைக் கொள்ளி எறும்பு
38. இருவர் நட்பு ஒருவர் பொறை
39. இருளில் செய்தது வெளிச்சத்துக்கு வரும்
40. இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி
41. இறைக்கிற கிணறுதான் சுரக்கும்
42. இறைக்கிற கிணறு வற்றாது
43. இறைத்த கேணி ஊறும்; இறையாத கேணி நாறும்.
44. இறுகினால் களி; இளகினால் கூழ்.
45. இன்பங்களே வியாதிகளின் பிறப்பிடம்
46. இன்பத்தைத் தொடரும் துன்பம்
47. இன்பமும் துன்பமும் எண்ணங்களின் வண்ணங்கள்
48. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
49. இனம் இனத்தோட சேரும்
50. இனம் இனத்தோடு, பணம் பணத்தோடு
51. இனம் பிரிந்த மான் போல

‘ஆ‘ - வரிசையில் பழமொழிகள்

1. ஆ வேறு நிறமானாலும் பால் வேறு நிறமாகுமா?
2. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கலை.
3. ஆக்கம் ஊக்கம் தரும்
4. ஆகக் குழைப்பேன் அரிசியாய் இறக்குவேன்
5. ஆகாசத்தை வில்லாக வளைத்து மணலைக் கயிறாகத் திரிப்பது
6. ஆகாசப் பந்தல் போடுவது
7. ஆகாத நாளில் பிள்ளை பிறந்தால் அண்டை வீட்டுக்காரனை என்ன செய்யும்?
8. ஆகாத்தியக்காரனுக்குப் பிரம்மஹத்திக்காரன் சாட்சியா?
9. ஆகாதவற்றை ஏற்றுக்கொண்டால் ஆய்ந்து ஏற்றுக்கொள்.
10. ஆகாயத்தில் பறக்க உபதேசிப்பேன், என்னைத் தூக்கி ஆற்றுக்கு அப்பால் விடு என்றான் குரு.
11. ஆகிர்த்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா?
12. ஆகுங்காய் பிஞ்சிலேயே தெரியும்
13. ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
14. ஆசானுக்கும் அடவு தப்பும்; ஆனைக்கும் அடி சறுக்கும்.
15. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக்கட்டை.
16. ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
17. ஆசை உள்ள அளவு அலைச்சலும் உண்டு
18. ஆசை கண்ணையும் மறைக்கும்; அறிவையும் மறைக்கும்.
19. ஆசை வெட்கம் அறியாது
20. ஆட்டாளுக்கு ஒரு சீட்டாள்; அடப்பக்காரனுக்கு ஒரு துடைப்பக் கட்டை.
21. ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு; ஐயங்காருக்கு மூனு கொம்பு.
22. ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைத்தான்
23. ஆட்டுத் தலைக்கு வண்ணான் பறப்பதுபோல்
24. ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்று சொன்னாள்
25. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
26. ஆடிப்பட்டம் தேடி விதை
27. ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?
28. ஆடு கொண்டவன் ஆடித் திரிவான், கோழி கொண்டவன் கூவித் திரிவான்.
29. ஆடு கொழுத்தால், இடையனுக்கு லாபம்.
30. ஆடு கோனானின்றிப் தானாய்ப் போகுமா?
31. ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்
32. ஆடு மாடு இல்லாதவ்ர் அடை மழைக்கு ராஜா; பிள்ளை குட்டி இல்லாதவர் பஞ்சத்துக்கு ராஜா.
33. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்
34. ஆடையைக் கண்டு எடை போடாதே!
35. ஆண்ட பொருளுக்கு அறியாதார் செய்த தவம், மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.
36. ஆண்கள் ஆயிரம் ஒத்திருப்பார்கள், அக்கா, தங்கச்சி ஒத்திரார்கள்.
37. ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்
38. ஆண்டி வேஷம் போட்டும் அலைச்சல் தீரலை.
39. ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல்
40. ஆணிக்கு இணங்கிய பொன்னும் மாமிக்கு இணங்கிய பெண்ணும் அருமை
41. ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யக்கூடாது
42. ஆணை அடித்து வளர்க்கனும்; பெண்ணைப் போற்றி வளர்க்கனும்.
43. ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்
44. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
45. ஆத்திரம் அறிவுக்கு சத்ரு.
46. ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆத்தோடு போவாரா?
47. ஆம்படையான் அடித்ததற்கு அழவில்லை, சக்களத்தி சிரிப்பளென்று அழுகின்றேன்.
48. ஆம்படையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வர வேண்டும்
49. ஆம்படையான் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை செய்யலாம்
50. ஆம்படையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லலாமா?
51. ஆபத்துக்கு பாவமில்லை
52. ஆம்புடையான் செத்து அவதி படும்போது, அண்டை வீட்டுக்காரன் அக்குளிலே பாய்ச்சுகிறான்!
53. ஆய உபாயம் அறிந்தவன் அரிதல்ல வெல்லுவது
54. ஆயத்திலும் நியாயம் வேண்டும்
55. ஆயிரம் நட்சத்திரம் ஒரு நிலவுக்கு வருமா?
56. ஆயிரம் பயிர்கள் வாடி நிற்பது பாசனம் தேடி; ஆயுதம் ஏந்தி ஓங்கி நிற்பது ஆசனம் தேடி.
57. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
58. ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு.
59. ஆர் குத்தியும் அரிசியானால் சரி
60. ஆராய்ந்து பாராதான் காரியம்தான் சாந்துயரம் தரும்
61. ஆரால் கேடு? வாயால் கேடு.
62. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
63. ஆல்போல் விழுதுவிட்டு, அறுகுபோல் வேரோடி, மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்.
64. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
65. ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை
66. ஆலை கரும்பு போல
67. ஆலும் வேலும் பல்லுக்குறுத்; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
68. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
69. ஆவல் மாத்திரம் இருந்தென்ன, அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்.
70. ஆழம் குறைந்த இடத்தில் ஆற்றைக் கட!
71. ஆழம் தெரியாமல் காலை விடாதே!
72. ஆழமற்ற அறிவு சாரமற்று நகைக்கும்
73. ஆழமான நீரும் அமைதியான நாயும் ஆபத்து
74. ஆழாக்கு அரிசி, மூவாழாக்குப் பானை, முதலியார் வருகிற வீராப்பைப் பாரு.
75. ஆழியின் அளவை விட ஆழமானது பெண்ணின் மனது
76. ஆள் கொஞ்சமானாலும் ஆள் மிடுக்கு.
77. ஆள் செய்யாத்தை நாள் செய்யும்
78. ஆள் பாதி; ஆடை பாதி.
79. ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்
80. ஆளுக்கொரு குட்டு குட்டினாலும் அவனுக்கு புத்தி வராது.
81. ஆளுக்கொரு குட்டு குட்டி அடியேன் தலை மிடாப்போல
82. ஆளை ஆள் அறிய வேண்டும் மீனைப் புளியங்காய் அறிய வேண்டும்
83. ஆளைக்கொண்டு எடை போடாதே!
84. ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால்
85. ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடப்பதுண்டு.
86. ஆற்றிலே போகும் தண்ணீரை அப்பா குடி, ஆத்தா குடி.
87. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
88. ஆற்றிலே தண்ணீர் அலைஅடித்து போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்
89. ஆற்று நீரை அளந்து குடி, குளத்து நீரை குனிந்து குடி
90. ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி, ஆற்றைக் கடந்தபின் நீ யாரோ? நான் யாரோ?
91. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.
92. ஆறின கஞ்சி பழங்கஞ்சி
93. ஆறினால் அச்சிலே வார், ஆறாவிட்டால் மிடாவிலே வார்.
94. ஆறு காதம் எனும்போதே கோவணத்தை அவிழ்ப்பானேன்?
95. ஆறு கொண்டது பாதி, தூறு கொண்டது மீதி.
96. ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு?
97. ஆறு போவதே போக்கு; அரசன் சொன்னதே தீர்ப்பு.
98. ஆறெல்லாம் பாலாக ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்
99. ஆனாக்க அந்த மடம்; ஆகாட்டி சந்தை மடம்
100. ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.
101. ஆனை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்பதா?
102. ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்
103. ஆனைக்கில்லை கானலும் மழையும்
104. ஆனைக்கும் பானைக்கும் சரி
105. ஆனைக்கும் அடி சறுக்கும்
106. ஆனை தழுவிய கையாலே ஆடு தழுவுதோ?
107. ஆனை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே.
108. ஆனையின் வாய்க்குள் போன கரும்பு போல
109. ஆனையும் அருகம்புல்லில் தடுக்கும்
110. ஆஸ்தியுள்ளவன் ஆஸ்திக்கு அடிமை

‘அ‘ - வரிசையில் பழமொழிகள்

1. அக்கம் பக்கம் பாத்துப் பேசு.
2. அக்கா பண்டம் அரிசி; தங்கச்சி பண்டம் தவிடு.
3. அக்கா புருஷன் அரை புருஷன்
4. அக்கா இருக்கும் வரைதான் தங்கச்சி உறவு.
5. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை
6. அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பிள்ளை.
7. அக்கிரஹாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?
8. அக்கினி மழையில் கற்பூர பணம் தொடுத்தாற்போல
9. அக்கு தொக்கு இல்லாதவனுக்கு துக்கம் என்ன?
10. அக அழகே அழகு
11. அகங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா?
12. அகட விகடமாய் பேசுகிறான்
13. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
14. அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே!
15. அகதிக்கு ஆகாயம் துணை
16. அகதிக்கு தெய்வம் துணை
17. அகதி சொல் அம்பலம் ஏறாது
18. அகதி தலையில் பொழுது விடியுது
19. அகதி பெறுவது பெண் பிள்ளை, அதுவும் பூராடம்
20. அகதியை பகுதி கேக்குதா?
21. அகந்தை அழிவுக்கு வழி வகுக்கும்
22. அகப்பட்டுக்கொள்வேன் என்றா கள்ளன் களவெடுக்கிறான்?
23. அகப்பட்டவனுக்கு அஷ்டமச்சனி, ஓடிப்போனவனுக்கு ஒம்பதுல ராஜா.
24. அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்
25. அகப்பை பிடித்தவன் தன்னவனானால், அடிப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன?
26. அகப்பை பிடிக்கிறவன் பரிமாறினால் முதல் பந்தியென்ன? கடைசி பந்தியென்ன?
27. அகம் ஏற சுகம் ஏறும்
28. அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்
29. அகல் வட்டம் பகல் மழை
30. அகல இருந்தால் பகையும் உறவு
31. அகல இருந்தால் நீள உறவு, கிட்ட இருந்தால் முட்டப் பகை
32. அகல இருந்தால் புகல உறவு
33. அகல் உழுவதைவிட ஆழ உழுவதே மேல்.
34. அகலக்கால் வைக்காதே!
35. அகல் வட்டம் பகல் மழை
36. அக விலை அறியாதவன் துக்கம் அறியான்
37. அகழியிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்
38. அகர நாக்காய் பேசுகிறான்
39. அகோர தபசி விபரீத சோரன்
40. அங்காங்கு வைபோகமாயிருக்கிறான், இங்கே பார்த்தால் அரைக்காசு முதலும் இல்லை.
41. அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்
42. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
43. அச்சுறுத்திப்போ! அறிவுறுத்திப்போ!
44. அசலான் வீட்டில் ஐந்து நாள் பட்டினி கிடப்பான்
45. அசைந்து தின்னும் யானை; அசையாமல் தின்னும் வீடு.
46. அஞ்சியவன் கண்ணுக்கு ஆகாசம் பேய்தான்
47. அஞ்சியவனைக் குஞ்சும் விரட்டும்
48. அஞ்சியவனைப் பேய் அடிக்கும்
49. அஞ்சினாரைக் கெஞ்ச வைக்கும்; அடித்தாரை வாழ வைக்கும்.
50. அஞ்சு காசுக்கு குதிரையும் வேண்டும், அதுவும் ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
51. அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல்
52. அட்டையாக ஒட்டிக்கொள்
53. அடக்கமுடையார் அறிஞர்; அடங்காதவர் கல்லார்.
54. அடக்கமே பெண்ணுக்கு அழகு
55. அடக்குமுறை அல்ல அறிவுரை
56. அடாது செய்தவன் படாது படுவான்
57. அடாது தடை வரினும் விடாது முன்னேறு
58. அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்
59. அடாது மழை பெய்தாலும் விடாது ஊர் போய்ச் சேருவான்
60. அடி அதிரசம், குத்து கொழுக்கட்டை.
61. அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்
62. அடிக்கிற கைதான் அணைக்கும்
63. அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி
64. அடித்தவன் பின்னால் போகலாம், நடித்தவன் பின்னால் போகாதே!
65. அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் ஒழுங்காகாது
66. அடிநாக்கிலே நஞ்சு, நுனிநாக்கிலே அமிர்தமா?
67. அடிப்பானேன், பிடிப்பானேன்? அடக்குற வழியில் அடக்குவோம்
68. அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
69. அடிமை வாழ்வினும் வீர மரணமே மேல்
70. அடிமை படைத்தால் ஆள்வது கடன்
71. அடியாத மாடு படியாது
72. அடியும் பட்டு புளித்த மாங்காயா திங்க வேண்டும்?
73. அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் லாபம்.
74. அடுத்தடுத்து சொன்னால் தொடுத்த காரியம் முடியும்
75. அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுவது போல்
76. அடுத்துக் கெடுப்பான் கபடன்; தொடுத்துவ் கெடுப்பாள் வேசி.
77. அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்லுவோன் குரு.
78. அடைப்பைப் பிடுங்கினவனைக் கடிக்கும் பாம்பு.
79. அண்டத்தில் இல்லாதது பிண்டத்திலா?
80. அண்டத்தைக் கையில் வைத்து ஆடுவானுக்கு சுண்டைக்காய் மெத்த பாரமா?
81. அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி
82. அண்டையில் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்
83. அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்
84. அண்ணனிடத்தில் ஆறு மாதம் வாழ்ந்தாலும் அண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா?
85. அண்ணனும் தம்பியும் ஜென்மப் பகைவர்
86. அண்ணாமலையார் அருளுண்டானல் மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா?
87. அணில் ஏறவிட்ட நாய் பார்ப்பதுபோல
88. அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
89. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
90. அத்தான் செத்தால் மயிராச்சு; கம்பளி மெத்தை நமக்காச்சு.
91. அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் புழு.
92. அத்துமீறிப் போனான், பித்துக்குளி ஆனான்.
93. அத்தைக்கு மீசை முளைத்தால், அவள் சித்தப்பா.
94. அததுக்கு ஒரு கவலை, ஐயாவுக்கு எட்டு கவலை.
95. அதிக ஆசை அஷ்ட தரித்திரம்
96. அதிகாலை எழாதவன் வேலை அழுதாலும் தீராது
97. அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால் விடியுமட்டும் திருடலாம்
98. அதிகாரி வீட்டில் திருடி தலையாரி வீட்டில் வைத்தது போல
99. அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியையே உடைக்கும்.
100. அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகாதே!
100. அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகாதே!
101. அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையும் தங்கமாகும்
102. அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு கலப்பால் வந்தாலும் அதையும் பூனை குடிக்கும்
103. அந்தணர் மனையில் சந்தனம் மணக்கும்
104. அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகன் போல
105. அப்பச்சி கோவணத்தை பருந்து கொண்டோடுது, பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுவுது.
106. அப்பம் என்றால் பிய்த்து காட்ட வேண்டுமா?
107. அப்பன் மாண்டால் அருமை தெரியும்
108. அப்பா என்றால் உச்சி குளிருமா?
109. அப்பியாச வித்தைக்கு அழிவில்லை
110. அம்மண தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன்.
111. அம்மா பாடு அம்மணமாம்; பிள்ளை கும்பகோணத்தில் கோ தானமாம்.
112. அம்பட்டையன் குப்பையை கிளறினால் முடிதான் மிஞ்சும்
113. அமர்த்தனுக்கும் காணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணி வேண்டாம்.
114. அமாவாசை சோறு என்றைக்கும் கிடைக்குமா?
115. அமாவாசை வந்தால் ஐயன்பாடு கொண்டாட்டம்
116. அமைதியுடைமையே அறிவுடைமை
117. அயல் வீட்டான் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா?
118. அயலார் உடைமையில் அந்தகன் போல் இரு
119. அயலான் வீட்டு நெய்யை ஊற்றிக் கொடுத்தான் கையை.
120. அயலானுக்கு ஆத்தோரம் பாயும்; உள்ளூர்காரனுக்கு மரத்தடியும் பாயும்.
121. அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு
122. அர்த்த ராத்திரியில் குடை பிடிக்காதே!
123. அரக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாய் இல்லை
124. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
125. அரசன் இல்லா நாடு அச்சில்லாத தேர்.
126. அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு.
127. அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி
128. அரசன் வழி அவனி.
129. அரசன் மகனாகப் பிறப்பதைவிட அதிர்ஷ்டக்காரனாகப் பிறப்பதே மேல்.
130. அரசனை நம்பி புருஷனை இழந்தது போல
131. அரசனும், நெருப்பும், அரவும் சரி
132. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
133. அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும்
134. அரி அரி என்றால் ராமா ராமா என்கிறான்
135. அர்ச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன்
136. அரிசி அழாக்கு ஆனாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்
137. அரிசி உண்டால் வரிசை உண்டாம்
138. அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து நிற்கிறான்
139. அருமை இல்லாதவன் வீட்டில் எருமையும் குடி இருக்காது
140. அருமை மருமகன் தலை போனாலும் போகட்டும், ஆதிகாலத்து ஆட்டுக்கல் போகக்கூடாது.
141. அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் கிடைக்காது
142. அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான், குடிக்கிறவன் ஒன்று நினைத்துக் குடிக்கிறான்.
143. அரைகுறை ஞானம் ஆபத்தானது
144. அரைச்சல்லியை வைத்து எருக்கலையைக் கடந்தது போல
145. அரைப் பணம் கொடுக்கப் பால்மாறி ஐம்பது பொன் கொடுத்துச் சேர்வை செய்த கதை
146. அரைப் பணம் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம்போல் ஆகுமா?
147. அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது
148. அலைமோதும்போதே தலை முழுகு
149. அல்லக்காட்டு நரி பல்லைக் காட்டுவதுபோல
150. அவ்வை சொல்லுக்கு அச்சம் இல்லை
151. அவசரக்காரனுக்கு புத்தி மட்டு.
152. அவசரக்கோலம் அள்ளித் தெளித்த கோலம்
153. அவமானம் பண்ணி வெகுமானம் பேசுகிறான்
154. அவலமாய் வாழ்பவன் சவலமாய்ச் சாவான்.
155. அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்
156. அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி
157. அவன் ஓடிப்பாடி நாடியில் அடங்கினான்
158. அவன் கையைக் கொண்டே அவன் கண்ணைக் குத்தினான்
159. அவன் கொஞ்சப் புள்ளியா?
160. அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்?
161. அவன் நா அசைய நாடு அசையும்
162. அவனது மொழியிலேயே பேசு
163. அவனுக்கும் இவனுக்கும் எருமைச் சங்காத்தம்
164. அவனே இவனே என்பதைவிடச் சிவனே சிவனே என்பது நல்லது
165. அழகிய ரோஜா முள்ளுடன் மலரும்
166. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தால் என்ன? கழுதை மேய்ந்தால் என்ன?
167. அழுகிற ஆணையும், சிரிக்கும் பெண்ணையும் நம்பக் கூடாது
168. அழுகிற பிள்ளை பால் குடிக்கும்
169. அழுதும், பிள்ளை அவளே பெற வேண்டும்
170. அழையா விருந்தாளியாய் செல்லாதே!
171. அள்ளாது குறையாது, சொல்லாது பிறவாது.
172. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
173. அளக்கிற நாளி அகவிலை அறியுமா?
174. அளவுக்கும் மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
175. அளவோடு உண், வளமோடு வாழ்!
176. அற்ப அறிவு அல்லற்கிடம்
177. அற்ப ஆசை கோடித் தவத்தைக் கெடுக்கும்
178. அற்பக் கோபத்தால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோஷத்தால் திரும்ப வருமா?
179. அற்பர் சிநேகம் பிராண சங்கடம்
180. அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான்
181. அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பானாம்
182. அறங்கெட்ட நெஞ்சு திறங்கெட்டு அழியும்
183. அறிந்தறிந்து செய்த பாவத்தை அழுதழுது தொலைக்க வேணும்.
184. அறிய அறிய கெடுவார் உண்டோ?
185. அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள்
186. அறிவாளிகள் ஒரு போலவே! முட்டாள்கள் பலவிதம்.
187. அறிவாளியின் தலை பயிரில்லா நிலம்
188. அறிவில்லாதவன் உழைப்பு தறி கெட்டோடும் குதிரை
189. அறிவிலிகளும் அறிவாளர்களே, தங்கள் வாயைத் திறவாத வரையிலே.
190. அறிவுக்கு எல்லை உண்டு, பேதமைக்கு எல்லையே இல்லை.
191. அறிவுக்கு முன் செல்லும் நாக்கு, அதை உடையவன் மக்கு.
192. அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.
193. அறிவுடையாரை அரசனும் விரும்புவான்
194. அறுதலி மகனுக்கு அங்கம் எல்லாம் சேட்டை
195. அறுப்புக்காலத்தில் எலிக்கு அஞ்சு பொண்டாட்டி.
196. அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்
197. அன்புள்ள சிநேகிதனை ஆபத்தில் அறியலாம்
198. அன்று எழுதினவன் அழித்து எழுதுவானா?
199. அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இட்டது போல்
200. அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்
201. அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்
202. அன்ன நடை நடக்கப்போய் காகம் தன் நடையும் கெட்டதாம்
203. அன்னைக்குதவாதான் யாருக்கும் உதவான்
204. அனுபவமே அறிவு

- இன்னும் வரும் .........